மதம் பிடித்துவிட்டது

முட்டாள்களின் இராஜ்ஜியத்தில் மூடத்தனமான நம்பிக்கைகளே பரவிக் கிடக்குது!
இது மக்களின் புனித உணர்வென்று மதிக்கப்படுகிறது.
கோயிலில் கடவுளை குடிவைக்கிறீர்கள்.
மனதில் சாத்தானை ஆள வைத்துள்ளீர்கள்.

சித்தனின் வாக்கை உணராதவர்கள் இந்த பித்தனின் வாக்கை எப்படி ஏற்கப்போகிறார்கள்?
அதோ கடவுள் வீடு, அது அந்த கோயில்.
இதோ சாத்தானின் அரண்மனை, அந்தோ உங்கள் மனம்.

இதனை உணர்ந்தே சாத்தான் கடவுளிடம் சவால் விட்டார்.
உன் பக்தர்களை நான அழிக்க வேண்டியதில்லை.
அவர்களே அழித்துக் கொள்வார்கள் என்று.
சாத்தானை கெட்டவனாக,
கொடுமைக்காரனாக சித்தரித்த நீங்கள் கெட்டு கொடுமைக்காரர்களாக வாழ்கிறீர்கள் உங்கள் மதத்தின் பெயராலே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Nov-19, 5:16 pm)
பார்வை : 572

மேலே