காணாமல் போன நிலவு

நமக்கெல்லாம் குளிர்தரும் நிலவிற்கு
குளிரெடுக்க மேகப்போர்வைக்குள்
ஒளிந்து கொண்டது ....இரவெல்லாம் ....
வெய்யோன் காலைக் கதிர்கள்
மேகப்போர்வையை சுட்டெரிக்க
போர்வையும் காணவில்லை நிலவும்
எங்கோ ஒளி குன்றி போய் மறைந்தது

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (14-Nov-19, 3:28 pm)
பார்வை : 231

மேலே