இயற்கை

சமநிலைப் படுத்தும் கலையில்
இயற்கையை மனிதன் மிஞ்சவே இயலாது
கொஞ்சம் யோசித்துதான் பாருங்களேன் புரியும்
ஓடும் நதி நீரெல்லாம் உப்பு நீராய் கரிக்க
கடல் நீர் உப்பில்லா நீராய் இருந்தால்
மனிதன் வாழ்ந்திருக்க முடியுமா
இல்லை உப்பு நீராம் கடல் நீர்
வெய்யோன் உறிஞ்சி மழைத்தரும்
நன்னீர் மேகங்களாய் மாற்றாது
இருந்தால் மழை வெறும் உப்பு நீராய்
அல்லவா பொழிந்து கொண்டிருக்கும்
மனிதன் நன்னீர் மழை இல்லாது வாழ்தல்
சாத்தியமா ..... யோசித்து பாருங்கள் புரியும்
இதுதான் இயற்கை ஆற்றும்
' சமநிலைப் படுத்தும் கலை' என்பேன் நான்
நம்மை வாழவைக்கும் இயற்கை


'

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (15-Nov-19, 1:02 pm)
Tanglish : iyarkai
பார்வை : 610

மேலே