‘பாவம் பூனைக்குட்டிகள்’…
.உள்ளேயிருந்து வெளியே போகும்போதும்
வெளியேயிருநது உள்ளே வரும்போதும்…
‘அவை’கள் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்று அவசரமாய்
சாத்தப்பட்டக் கதவுகள்
இன்று சலனமின்றி நின்று ஏளனிக்கின்றன
கேட்டு, கேட்டு வாங்கி, வாங்கி பழக்கப்பட்டுப் போனபின்
இன்று கேட்காமலே தானாகவே
கறிக்கடையில் கிடைக்கப்பெற்ற உபரி ஈரல்
சமைக்க இருக்கும் மாமிசத்ததோடு ஒட்டாமல்
அந்நியப்பட்டுக் கிடக்கிறது
பால் பாக்கெட்டுகளில் மிச்சப்பட்டுப்போன
வாராந்திர சேமிப்புகளில்
வந்து குசலம் விசாரித்துப் போகின்றன ‘அவை’கள்
சிப்ஸ் வாங்கும் பேக்கரியை
அவசரகதியில் கடக்கும்போதெல்லாம்…
குற்றவுணர்ச்சிக்காட்படும் கண்சிமிட்டல்களுக்குள்