அரசாளும் அரிசி

அரிசியில் மஞ்சள் கலந்து
அட்சதை என்று சொன்னோம்

அரிசியை தகடாய் நசுக்கி
அவுல் என்று பெயரிட்டோம்

அரிசியை சுடுமணலில் இட்டு
பொரி என்று பூரித்தோம்

அரிசியை நீரில் வேகவைத்து
சோறு என்று உண்டு மகிழ்ந்தோம்

அரிசியை ஊறவிட்டு அரைத்து
மாவென்று தோசை சுட்டோம்

அரிசியில் வெல்லமிட்டு
காப்பரிசி என்று வழங்கினோம்

இறந்தவனுக்கு அரிசியிட்டு
வாய்க்கரிசி என்று அழுதோம்

உடைந்து போன அரிசிக்கு
நொய் என்று பெயரிட்டோம்

அரிசி நமக்கு அரசன் தானே
அதனை போற்றினால் சிறப்பு தானே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Nov-19, 7:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே