உன்னதம் தரும் உயிர்

ஆறடி உருவத்திலே
அதைப்பார்க்க முடியில
அது இல்லாம எவ்வுடலும்
அசையக்கூட முடியில

அறிவியல் கூட இதுவரை
அதைக் கண்டு பிடிக்கல
ஆழ்ந்து உறங்கரப்ப
அது உடலை விலகல

அதற்கென்று ஆசைகள் இருப்பதா
அறிந்து கொள்ள முடியில
அதனை விலைக்கு வாங்கத்தான்
ஒருவரும் முயற்சி பண்ணல

எங்கே இருந்து வந்தது
பாதை நமக்கு தெரியல
எங்கே மறைந்துக் கொண்டது
என்ற விளக்கம் புரியல

இருக்கும் வரையில் அதன் மகத்தும்
இருப்போருக்கு புரியல
இறந்த பின்பு வருந்துவது
என்ன நியாயமோ விளங்கல.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Nov-19, 7:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 126

மேலே