செயல்பாட்டின் சிறப்பு

சட்டத்தின் மூலமே ஆட்சிகள் நடக்குது
சட்டத்தின் மூலமே கண்காணிப்பும் நடக்குது
சட்டத்தின் மூலமே வரி வசூலும் நடக்குது
சட்டத்தின் மூலமே தண்டனைக் கிடைக்குது
சட்டத்தின் மூலமே தப்பித்தல் நடக்குது
சட்டத்தின் மூலமே தேர்தல் நடக்குது
சட்டத்தின் மூலமே தேர்வுகள் நடக்குது
சட்டத்தின் மூலமே கட்டுமானங்கள் நடக்குது
சட்டத்தின் மூலமே கல்விச் சாலைகள் இயங்குது
சட்டத்தின் மூலமே வேலை வாய்ப்பும் கிடைக்குது
சட்டத்தின் மூலமே அரசாங்கத்தின் செயற்பாடு.
சட்டத்தின் மூலமே மக்கள் நலன் கண்காணிப்பு
சட்டத்தின் மூலமே நீதி மன்றங்கள் இயங்குது
சட்டத்தின் மூலமே ஆன்மீக நிறுவனங்களின் பணிகள்
சட்டத்தின் மூலமே ஒப்பந்த பணிகளின் நிறைவு

ஆட்சியாளர்களாலே அராஜகம் நடக்குது
கண்காணிப்பினாலே கள்ளப்பணம் புரளுது
வரி வசூலினாலே வம்புகள் பெருகுது
தண்டனைப் பெற்றவன் தலைவனாய் மாறுறான்
தப்பிக்கும் எல்லாமும் தவறுகளாய் செய்யுது
தேர்தல் காரணமாய் திறமைகள் தேயுது
தேர்வை முன்னிருத்தி திருட்டுத்தனம் உயருது
கட்டுமானங்களில் கெட்டித்தன்மை சிதையுது
கல்விச்சாலைகளும் காசு வாங்கும் கழிப்பறையாய்
திறமைக்கு இல்லாமல் ஜாதி அடிப்படையிலே வேலை
அரசு ஊழியர்களால் அட்டூழியம் பெருகுது
மக்களின் பேராசையால் மலிவாய் குற்றம் செழிக்குது
நீதி மன்றங்களினால் நீண்டதாய் பகை மாறுது
ஆன்மீக போர்வையில் அசிங்கங்கள் வாழுது
ஒப்பந்தத்தாலே பல ஒவ்வாமை நிலைக்குது
ஏட்டால் எதுவும் நிகழாது செயல்பாட்டாலே சிறக்கும்
- - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Nov-19, 10:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 36

மேலே