இசைப்பாடும் பாக்கள்
ஏழு ஸ்வரங்களுக்குள்
ராகங்கள் அத்தனையும்
ஸ்வர பேதத்தில்
ஓசைகள் மாறி
வரும் புதுப் புது ராகங்கள்
செங்கல் ஒன்றே
அதை அடுக்கி அமைக்கும் விதத்தில்
கட்டிடத்தின் களையே மாறும்
சொற்கள் ஏராளம்
அவை தருமே அசைகள்
அசைகள் தரும் வித வித ஓசை
அசைகளின் அமைப்பில்
அதற்கேற்றாற்போல் பாக்கள்
இசைக்கும் இன்னிசையே