ஓ முதல் எழுத்துக் கவிதை தலைப்பு ஓடுகின்றது காலம்

ஓடம் ஏறி ஓடையில்
போனவரே/
ஓடும் முகிலை தூதாக
விடவா?
ஓராயிரம் ஆசைகளை
நெஞ்சில் அடைத்தவரே/
ஓயாமல் கனவில்
வந்து விடுவாயா?
ஓங்கி அடிக்கும்
அலையிடம் புலம்பிடுவாயா?
ஓலைக் குடிசையில்
நினைவோடு காத்திருக்கேன் /
ஓசையிடும் நாயும்
காவலுக்கு விழித்திருக்கு/
ஓட்டாண்டியான வாழ்க்கையே
நிலையானது மீனவனுக்கு /
ஓட்டைப் பானையும்
அணைந்த அடுப்புமாக /
ஓடுகின்றது காலம்
நம்மையும் அழைத்து /