அடிப்படை உண்மை
தேகத்தில் துவாரங்கள் உள்ளதோரும்
துர்நாற்றமே என்றும் வீசும்
துர்நாற்றம் நிறைந்த வாயால்
நற்வார்த்தையா செறிந்து காணும் ?
உண்ட உணவு என்றும் செறித்து
துர்மண மலமாய் மாறும்
மலத்தினால் கிடைக்கும் திறனால்
மனித குணம் செழித்தா ஓங்கும் ?
அனைத்துயிர் கொன்று உண்ணும்
ஆறறிவு படைத்த மிருகம்
அகிம்சை எண்ணம் பேசினால் மட்டும்
அகிலவுலகம் கும்பிட்டா தொழுவும்
நற்கருத்து பேசும் யாவும்
நற் எண்ணத்தால் வளர்ந்தால் சிறப்பு
நற்குணங்கள் நீங்க பேசினால்
நட்டங்கள் மட்டுமே இருப்பாம்.
----- நன்னாடன்.