என் தாகத்தை கூட்டிவிட்டாளே
பொன்மாலைப் பொழுதில்
வண்ணநிறங்கள் உமிழும் சூரியகதிர்கள்
மலைகளின் பசுமைகளில் படர்ந்து
வைகைநதியிலெழுந்த நீர்க்குமிழ்களில் சிதறி
மரக்கிளைகளிலாடும் இலைகளினிடையே ஊடுருவி
அன்னார்ந்து நீர் அருந்தும் அவளின் மேல் விரவ
தென்றல் கருங்கூந்தலினிடையே ஆட
பொன்னிறமாய் காட்சியளிக்கிறாள்...
பொன்மின்னும் தோற்கும் முகழகா இல்லை
பகலிலே வண்ண மின்மினிகளை ஜனனிக்கும் முகழகா!
வெண்திரவ நதிபாயும் குரல்வளையா இல்லை
புனலோடும் தாமரை இலை நதியா!
என்குற்றம் செய்தேனோ அவள் தாகம்தீர
என் தாகத்தை கூட்டிவிட்டாளே!