பதைபதைக்கும் கொடூரம்
பணத்தை பல நிறத்தில் அச்சடித்து
பல வகையில் புழக்கத்தில் விட்டு
பல பேரால் மறைத்து சேமிக்கப்பட்டு
பலரை படு மோசமாய் பலவந்தப்படுத்தி
பச்சா பாதகத்துக்கு அஞ்சதவர்களால்
படு மோசமான பொருட்களை விற்க வைத்து
படிப்படியாய் சேர்த்தப் பணத்தை
பட்டென்று திடீராய்வு செய்து கைப்பற்றி
பலவகையான பேரம் பேசி பங்கிட்டு
பகடை ஆட்டம் ஆடும் பார்புகழும் நாட்டில்
பசியாலும் பஞ்சத்தாலும் பரிதவித்து
பாறை நிலத்தில் உழுது பயிரை விளைவித்து
படிப்படியாய் பணத்தைச் சேர்த்து
பாச மகனை ஆசை ஆசையாய் படிக்க வைத்து
பட்டப்படிப்பு படித்தும் படிப்புக்கேற்ற கல்வி வழங்காத
பல்கலைக்கழத்தால் பட்டம் பெற்று
பலதரப்பட்ட வேலையிலும் பழக்கிக் கொள்ளாமல்
பாதை மாறி போதையால் உழன்று
பதைபதைக்கும் கொடூர கொலைச் செய்யத் தூண்டும்
பகுத்தறிவு மிக்க அரசாய் உள்ளது இப் பாரதம் .
---- நன்னாடன்.