காயகல்பமாம்
மூச்சை பழக்கி முழுவதும் அடக்கி
காற்றைத் தேகம் எங்கும் செலுத்தும்
ஆற்றல் அதனை அழகாய் வளர்த்து
அகத்தையும் புறத்தையும் ஆளுமை செய்து
தேங்கும் கொழுப்பினை திறம்பட கரைத்து
வீக்கம் புண் என வருவதை தவிர்க்க
அழகான உடலினை அழுக்கற காத்து
ஆசையையும் அச்சத்தையும் அளவினில் வைத்து
இன்பம் மகிழ்ச்சியை கமல இலைமேல் நீராக
உடலை முறுக்கி ஒரு நிலையில் வைத்து
குடலை சுறுக்கி குரலை அமிழ்த்தி
நடையை பெருக்கி நற்கதிரில் உழைத்து
அரிய மழை நீரில் அமிழ்ந்து குளித்து
அல்லில் உறங்கி பகலில் பாடுபட்டு
உண்ட உணவின் உள்ளச் சத்துக்கள்
உடலைச் சேர ஒவ்வொரு நாளும்
உறுதி ஏற்போரின் உடலே காயகல்பமாம்.
---- நன்னாடன்.