கால்வயிற்றையும் நிரப்பாத விவசாயம்

பெற்று எடுத்தீரோ என்னை பெரும்பாடுபட்டு
பிறக்க வேண்டினேனோ பிள்ளையாய் உங்களுக்கு
நால்வர் நலத்துடன் இருக்க நான் ஏன் ஐந்தாவதாய்
நல்லுணவுக்காக அல்லலோ அல்லல்.

கூலி கிடைக்கா வேலையிலே குறியாய் சென்றும்
பாரம்பரியம் என்றும் பரம்பரை தொழில் என்றும்
பாடுபட்டு உழன்று நஞ்சு கிழிஞ்சு இரணமாகி
கால்வயிற்றையும் நிரப்பாத விவசாயம் ஏன்.

ஆடு மாடு மேய்த்து அறிவைப் பெருக்காமல் தேய்ந்து
ஆண்டு தோறும் அலைந்து நொந்து சிதைந்து
அரசு உதவிக்கு ஏங்கி அவர்களிடம் அசிங்கப்பட்டு
அடிப்படை வாழ்விற்கே அதகலப்படுவதோ.

பிள்ளைகளின் துணிச்சலை முளையில் கிள்ளி எறிந்து
பிணம் போல் வாழ பழக்கப்படுத்தும் பெற்றோர்கள்
பிறக்கவைக்கும் முன் தன்னிலை உணராமல்
பெண்ணின் உடலில் ஏற்றம் இறைத்தது ஏன்.

நவீனத்தோடு நயந்துச் சென்றுப் பழகி
நன்றாக அதைப் பயின்று வித்தகமாகி
மற்றவர்கள் வியக்க அறிஞனாகி ஆற்றல் பெற்று
அற்புதம் செய்ய வளருங்கள் பிள்ளையை பெற்றோரே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Nov-19, 9:33 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1580

மேலே