பள்ளிக்கூடோ விட்டாச்சு

நாளை பாடசாலை விடுமுறை
ராமு/
நம்ம வேலை தொடரட்டுமடா
ராமு/
வீட்டான்ட நீ வந்திருடா
வேலு/
கலந்து பேசிக்குவோம் நாமும்
காமு/

அடுத்தது என்னவென்று நானும் சொல்லிக்கிறேன்/
தூண்டிலோடு தோண்டிய
புளுவையும் எடுத்துக்குவோம்/
அடுத்த வாய்க்கால்
ஓரமாகக் கூடிக்குவோம்/
மீனும் புடிச்சுக்குவோம்
கும்மாளமும் போட்டுக்கிவோம்/

கம்மாக் கரையோரம் சோளம் திருடிக்குவோம்/
முனியாண்டி துரத்திக்கிட்டா
ஓட்டம் எடுத்துக்குவோம்/
கண்ணம்மா தோட்டத்தில்
மாங்காய் பறிச்சுக்குவோம்/
மறைந்திருந்து கல்லடிச்சு
புளியங்காய் பொறுக்கிக்குவோம்/

நுங்கு வண்டிப் போட்டி நடத்திக்குவோம்/
தவளைக்கு அறுவைச் சிகிச்சை பண்ணிக்குவோம்/
வார விடுமுறையை மகிழ்வோடு முடிச்சுக்குவோம்/



தேர்வுக்கு நன்றிகள் 😊❤🌹🌹

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-19, 11:49 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 60

மேலே