போ முதல்-எழுத்துக் கவிதை தலைப்பு திருந்தி வாழ்ந்திடு

போதனை கேளாப்
பிள்ளை தேறாது/
போதிப்போர் நாவும்
அதை ஏற்காது/

போசாக்கு உணவு
சக்தியைக் கொடுக்கும்/
போசனம் கெட்டால்
நோயைக் கொடுக்கும்/

போர் நிலம் வளர்ச்சியைக்
கெடுக்கும்/
போர்க் களத்தில் மாண்டால் பெருமையாகும் /

போதை ஏற்றினால்
மதி இறக்கும் /
போதைப்பித்தன்
உயிர் விரைந்து பறக்கும்/

போனால் மூச்சு திரும்பி
வராது/
போகும் முன்னே திருந்தி
வாழ்ந்திடு/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-19, 11:53 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

மேலே