அன்பு பொய்க்காது

ஒரு மாலைவேளை, சிறுவன் ஒருவன் கையில் பந்துடன் நண்பர்களோடு விளையாடச் சென்றானாம்.
விளையாடும் போது கவனமில்லாமல் ஓடியதில் கல்லில் கால் மோதி நிலைதடுமாறி விழுந்தானாம்.
விழும்போது அம்மா என்றே அழைத்தானாம்.
அம்மா அங்கே தன்னை தூக்கிவிட வரவில்லை என்றதும் அழுது கொண்டே எழுந்து வீடு சென்றானாம்.
தன் பிள்ளை அழுது கொண்டு வருவதைக் கண்ட தாய் உள்ளிருந்து எழுந்த அன்பால் என்னாச்சு மகனே என்று கேட்டாராம்.
நான் விழுந்த போது உன்னை அழைத்தேன்,
நீ தூக்கிவிடக்கூட வரவில்லை. உனக்கு என் மேல் அன்பில்லை, என்று கூறிக் கோபித்துக் கொண்டே சென்று படுத்தானாம்.
பிள்ளையின் கோபத்தால் தாய் தன் பிள்ளை மீது அன்பு மாறுமா?
அல்லது பிள்ளையின் அறியாமையால் தாய் தன் பிள்ளை மீது கொண்ட அன்பு தான் இல்லை என்றாகிடுமா?

மூடர்களே! அன்பை அறியுங்கள்.
அன்பை பற்றுங்கள்.
அன்போடு வாழுங்கள்.
நாம் விழுந்தால் நம்மால் எழ முடியும்.
அப்போது தூக்கிவிட வரவிலையே என்று கடவுளையோ அன்பானவர்களையோ கோபித்து சபிக்காதீர்கள்.
எல்லாரையும் அன்போடு நடத்துங்கள்.
அன்பே துணை வரும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Nov-19, 9:05 pm)
பார்வை : 2668

மேலே