காதல்

மஞ்சள் வெயில் காயும் நேரம்
மாமன் வீட்டில் அஞ்சா சென்றேன்
தங்கச் சிட்டொன்று உள்ளே ஓடி
மின்னலாய் மறையத் தொடர்ந்தேன் நானும்
சாளரச் சன்னலை சாத்தி இருளில்
தனித்த அறையில் மதனியின் தங்கை
ஒடிசலாய் ஓங்கிய வனப்புடை தேவதை
மஞ்சள் அழகி இருளில் நின்றவள்
மஞ்சம் சாய சன்னல் விரிசலில்
சஞ்சரித்த ஒளியவள் சிற்றுளி நாசிபட்டு
கம்மாளன் பொன்னாய் அறையே மின்னி
மஞ்சள் நிறமாய் மாறியது கண்டு
சிந்தை பேதலித்த நானும்
தினமும் மெலிந்தேன் இதுதான் காதலோ

எழுதியவர் : பழனி ராஜன் (29-Nov-19, 9:08 pm)
பார்வை : 233

மேலே