முலாம் மூன்

மஞ்சள் மாலை நிலவே
கதிரவன் போகிற போக்கில்
தங்க முலாம் பூசிச் சென்றுவிட்டானா ?
என் தங்கச் சிலை இதோ வருகிறாள்
சாயந்திர சந்திரனே
தங்கத்தின் சந்தை நிலவரம் பற்றி
நீங்கள் இருவரும் சற்று உரையாடுங்கள் !
வேறுவழியில்லை
நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் !