அன்பு மனைவிக்கு
அன்பு மனைவிக்கு
ஆழ்நிலத்தின் ஏமலதா பைம்பொற் கொடியாம்நீ
ஆழ்ந்து பெயர்வைத்தார் உன்தேகம்--கேழ்பொன்தான்
சூழ்ந்துநீ கற்றதமிழ் ஓதநானும் மாழ்கலாய்
வீழ்ந்து தமிழ்கற்றேன் கேள்
ஆழமான நிலத்தின் கீழே தங்கம் கொடிகளாக ஓடுகிறது (ஏமம் = த ங் கம்) .
(லதா =கொடி) உனது பெற்றோர்கள் சிந்தித்துதான் பெயர் வைத்தார்கள்போலும்
காரணம் உன்தேகம் பொன்னின் நிறமாகத்தான் உள்ளது. ஆராய்ந்து கற்ற தமிழை
நீ எனக்கு சொல்லித்தரவே கேட்பாய் தமிழ் மயக்கத்தில் மூழ்கி நானும் கற்றேன்