முதல் காதல்

நிதானமாக யோசித்து எடுத்த
முடிவு தான் !!!!
ஏனோ திசைமாறி போனது
வாழ்வில் இருந்து மட்டுமில்லை !!!!
வலிகளுக்கும் அப்பாற்பட்டுதான் ,,,
எதையும் தாங்க என்னால் முடியும் என
இறுமாப்பு கொண்டிருந்தேன் !!!
இன்றுதான் முழுமை உணர்ந்தேன் ,,,,
என்னை கட்டிப்போட ஒரு சக்தி
இன்று தோன்றி விட்டது என்று ...
வாழ்வை வெறுக்கவில்லை நான்
மாறாக என் நம்பிக்கையை வெறுத்துவிட்டேன் ,,,
ஒருவேளை என்மேல்தான் தவறோ ,,,
என் மனதின் சக்திதான் குறைந்து விட்டதோ ..
இல்லை இல்லை எண்ணில் இல்லை எந்த மாற்றமும் ...
இந்த உலகம் தன மாறிவிட்டது ...
பொதுவாக ஏன் சொல்ல வேண்டும் ,,,,
குறிப்பிட்டே சொல்கிறேன் ,,, மனிதர்கள்
ஆம் மனிதர்கள் தான் மாறிவிட்டார்கள் ,,,
எல்லா மனிதர்களும் இல்லை ,,,
என்னை சுற்றிய மனிதர்கள் மட்டும்தான் ...
காரணம் கேட்காதீர்கள் என்னிடத்தில் ????
எனக்கே தெரியாது ,,, தெரிந்து கொள்ளத்தான் விலகுகிறேன்....
என்னை யாரும் ஏமாற்றவில்லை ,,, நான்தான் நானே தான்
ஏமாற்றிக்கொண்டேன் ,,,,

வலிகளுடன்,,,,,,
ஸ்ரீஜே

எழுதியவர் : ஸ்ரீஜே (2-Dec-19, 4:37 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : muthal kaadhal
பார்வை : 264

மேலே