அவளழகு

தன்னொளி வீசும் முழுமதியோ
அவள் முகம் , அதில் அதரம்
செவ்வரளிப்பூவோ , நீண்ட
வண்ணக் கழுத்து வெண்சங்கோ
பொங்கும் அவள் இளமைக்காட்டும்
கொங்கை இரண்டும் மூடிய
மேலாடைக்கு பின்னே மறைந்திட முடியா எழிலோ
அழகிய அவள் மூக்கு குமிழம்பூவோ
தங்கள் குண்டலம் தாங்கும்
மெல்லிய கர்ணம் சொல்லும் அழகென்ன அழகென்ன
வல்லிக்கொடிக்கு நேர் இது என்பதுபோல்
காணாமல் காணும் அவள் இடைக்கு
மேகலையே நீ எதற்கு .....
வெண்ணிற கால்களிரண்டும் வாழைதண்டோ ,
சிவந்த அழகிய அவள் பாதாமிரண்டும்
அன்றலர்ந்த தடாகத் தாமரைப்பூத்தானோ

இப்படி அவள் அங்கம் ஒவ்வொன்றும் என்
மனதை கொள்ளைகொள்ள ..
மீண்டும் ஒருமுறை பாதம் விடுத்து
அவள் முகத்தைப் பார்த்தேன் நான்
அவள் காந்த கண்ணிரண்டும் கயலாய்த் துள்ளி
மூடித் திறக்கும் இமைகளுக்குள் மோகனைப்
புன்னகை வீச அந்த புன்னகையில் , நான்
என்னை வம்புக்கிழுக்கும் ஓர் குசும்பும் கண்டேன்,
என்னை அப்படியே அவளிடம் தந்துவிட்டேன்
இனி அவள் இல்லாது நான் இல்லையே
l

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Dec-19, 5:16 pm)
பார்வை : 340

மேலே