தியானம் செய்வோம்
மதம் சார்ந்ததல்ல தியானம்
மகத்துவம் வாய்ந்தது தியானம்
அனுதினமும் செய்வோம் தியானம்
அன்பாய் அரவணைக்கும் தியானம்
கண் மூடி அமர்வது தியானம்
மனதை குவிப்பது தியானம்
மகிழ்ச்சி நிறைப்பது தியானம்
ஆற்றல் கொடுப்பதே தியானம்
முகத்தின் பொலிவை கூட்டும்
பேச்சின் தொனியை மாற்றும்
தெளிவான செயலாற்றல் உருவாக்கும்
புருவ மத்தியில் மெய்சிலிர்க்கும்
வாழ்ந்தார்கள் முன்னோர்கள் இறந்தகாலம்
வாழ்வார்கள் சந்ததிகள் எதிர்காலம்
வாழ்கின்ற வாழ்க்கையே நிகழ்காலம் வாழ்க்கையில் கூடட்டும் தியான காலம்.
முன்னோர்களை நினைத்து சில திதிகள்
சந்ததியை நினைத்தே பல கவலைகள்
நிதியை நிறைத்தால் நிம்மதி கிட்டுமா?
அவர் விதி மாற்ற நம்மால் முடியுமா?
இல்லத்தின் மகிழ்ச்சிக்கு இனியதைச் செய்கிறோம்
உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு உரியதை செய்வோமா?
அவரவர் செய்யும் பாவபுண்ணியம்
மறுமை வாழ்வில் வருவது நிச்சயம்
ஆடி ஓடுகையில் விஞ்ஞானம்
ஆட்டம் ஒடுங்குகையில் மெய்ஞானம்
இதுவா நமது உயர் ஞானம்?
இளமையில் திறக்கணும் மெய்ஞானம்
புகழிடம் பணியும் மனது
புகலிடம் தேடி அலையும்
புக இடமற்ற ஒருநாள்
படைத்தவன் புகழிடம் பணியும்.
மண் வளத்தால் மகசூல் பெருகும்
மன வளத்தால் மரியாதை பெருகும்
மனவளம் தியானத்தால் பெருகும்
தியானம் பெருக அகிலம் சீர்படும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
