பறத்தல் மறவேல்

சிறகை விரித்துவிடு
பறவையே..

பறத்தல் உன்
திறமையல்ல..

உன் பண்பு

பயிற்சியோ
முயற்சியோ
எதுவும்
தேவையில்லை
பற..

சிறகுகள்
காற்றையும் கிழிக்கும்
வல்லமை பூண்டது..

உடலை தூக்கும்
வல்லான்மை
இங்கு வேறாருக்கும்
இல்லை
வலிமை கொண்ட பறவையே...

கண்டங்களையும்
கடல்களையும்
காற்றை உந்தி கடந்துவிடு..

வீழும் சிறகு
ஒன்றுதான்
உன்னில் வாழும் சிறகு
ஏராளம்..

உன் இறக்கைகள்
கடத்துவது உன்னில்
வலி அல்ல
வளியில் அவை கண்டு பிடித்த
வழிகள்..

பீறிட்டு பறந்துவிடு
வாழ்வை
போரிட்டு
வசமாக்கு
சிறகை விரித்து
விடு...

சிறைப்பறவையல்ல
நீ
சிறகடித்து பறந்து விடு
இமயங்கள்
உன் இளைப்பாற்றும்
மையமாகட்டும்
பறந்து செல்
உயர்ந்து நில்...

எபிநேசர் ஈசாக்

எழுதியவர் : எபிநேசர் ஈசாக் (4-Dec-19, 10:07 pm)
சேர்த்தது : Ebinesar521
பார்வை : 59

மேலே