Ebinesar521 - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Ebinesar521
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2019
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  6

என் படைப்புகள்
Ebinesar521 செய்திகள்
Ebinesar521 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2019 10:09 pm

ஊக்கத்தொகைக்கான
கை தூக்குதலில்
விதைக்கப்படுகிறது
அவனுள்
முதல் சாதி விதை....

எபிநேசர் ஈசாக்

மேலும்

Ebinesar521 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2019 10:07 pm

சிறகை விரித்துவிடு
பறவையே..

பறத்தல் உன்
திறமையல்ல..

உன் பண்பு

பயிற்சியோ
முயற்சியோ
எதுவும்
தேவையில்லை
பற..

சிறகுகள்
காற்றையும் கிழிக்கும்
வல்லமை பூண்டது..

உடலை தூக்கும்
வல்லான்மை
இங்கு வேறாருக்கும்
இல்லை
வலிமை கொண்ட பறவையே...

கண்டங்களையும்
கடல்களையும்
காற்றை உந்தி கடந்துவிடு..

வீழும் சிறகு
ஒன்றுதான்
உன்னில் வாழும் சிறகு
ஏராளம்..

உன் இறக்கைகள்
கடத்துவது உன்னில்
வலி அல்ல
வளியில் அவை கண்டு பிடித்த
வழிகள்..

பீறிட்டு பறந்துவிடு
வாழ்வை
போரிட்டு
வசமாக்கு
சிறகை விரித்து
விடு...

சிறைப்பறவையல்ல
நீ
சிறகடித்து பறந்து விடு
இமயங்கள்
உன்

மேலும்

Ebinesar521 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2019 11:47 pm

கசுமீரம்...

இருவரின் நாடு பிடி கொள்கையில்
நசுக்கட்பட்ட
வெந்நிற தேசம்...

அடிகளில் முள்ளைத்தாங்கி
வழியும் ரத்தத்தை
வண்ணமாக்கிக்கொண்டு
உங்களுக்கு வருமானம் ஈட்டி தரும்
கண்ணீர் சிந்தும் ரோஜாக்கள்
நிறைந்த செந்நிற
பூமி...

அரக்கர்கள் கால்களில்
மிதிபட்டு
இரத்தம் கட்டி நிற்கும்
அமைதியின் ஏரி...


இந்தியத்தின்
தேவையும்
பாக்கிஸ்தானியத்தின் தேவைகளும்
கசுமீரம்...

ஆனால்
கசுமீரத்தின்
தேவையோ
பிணவாடையற்ற மூச்சுக்காற்று..

இரத்தகறை படியாத ரோஜாக்கள்..

துப்பாக்கிச்சத்தம் இல்லா விடியல்கள்..

ஊசலாடாத தாலிகள்..

மூடப்படாத பள்ளிகள்..

எல்லாற்றிற்கும் மேலாக
நிரந்தரமான

மேலும்

Ebinesar521 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2019 11:45 pm

ஒரு முறையேனும்
நனைந்துவிடு அன்பே
பல லட்சம் மைல் கடந்து
பயணம் முடிக்கும்
வேளையில்
பத்தே நொடியேனும்
நனைந்திடு அன்பே
பயத்தின் களைப்பை
போக்கிடு
உன் பட்டுடல் தீண்டும் வரம் தந்து
மேகம் விட்டிறங்கி
மின்னல்களை கடக்கும் தூரம்
மலைப்பில்லை
அன்பே
உன் பேனி கடந்து
மீண்டு வருவதற்குள்
சிலிர்த்து
சிலிர்த்து
களித்து
களைத்து விடுகிறேன்
பாதம் தொட்டு
பரவச நிலை அடைந்து
பயணத்தை முடித்திட
ஒரு முறையேனும்
நனைந்திடு
அன்பே...

இப்படிக்கு
மழை..

எபிநேசர் ஈசாக்...

மேலும்

Ebinesar521 - Ebinesar521 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2019 6:03 pm

நின்ற நிலம் தீட்டாயின்
சென்றுவிடு
என் நிலம் விட்டு
தண்ணீரில் தீட்டென்றாயோ...

முன்னாளில் நான் குளித்து
முழுவாயு ம் கொப்பளித்து
மலம் கூட கழுவிட்டேன்
மாறுநாளில் நீ குளித்த
மடைதிறந்த நீரில்

எவ்வாற்றில் கழுவிடுவாய்
இத்
தீட்டை
எரிந்தே முடிந்துவிடு
இன்னும் நீ
தீட்டெனில்

நான் மிதித்து
உழவடித்து
நாளெல்லாம் களையெடுத்து
உடல் வடித்தவேர்வையும்
மண்மடித்த மலத்தையும்
உரமாக்கி
அரிசியாய்
பருப்பாய்
அடுக்கடுக்காய் காய்கறியாய்
விளைத்து அறுத்து
சமைக்க கொடுத்தேன்
சம்மதம் எனில்
நானும்
சமத்துவம் எனில்
நீயும்
தின்றுவிடு
இல்லை
எனில்
சென்றே விடு..

என் நிலம் விட்டு
நின்றே

மேலும்

நன்றி சகோ...நிச்சயமாக 09-Sep-2019 11:23 pm
அருமையான கருத்து செறிவுள்ள நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் சிறப்பாய் பகிருங்கள். 06-Sep-2019 6:50 pm
Ebinesar521 - ஸ்பரிசன் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2019 11:34 pm

இன்றைய அரசியல் தரம் தாழ்ந்ததுக்கு காரணம்?

மேலும்

சரியாகவே பதித்தேன். ஏன் இப்படி என்று தெரியவில்லை. கேள்வியை மாற்றாது அப்படியே கேட்க விரும்புகிறேன். சில தரவுகள் வைத்துக்கொண்டு கேட்ட கேள்வி என்பதால். எழுத்து நிர்வாகம் இதை சீர் செய்யும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி. 06-Sep-2019 7:16 pm
கருத்துக்கணிப்பு நீங்கள் கேட்ட மூன்றுகேள்விகளுக்கின்றி அரசியல் என்ற தலைப்பிற்கு ஓட்டளித்திருக்கிறது . ஏதோ பிழை . கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் சொல்கிறேன் மக்களின் பேராசையா அரசியல் வாதிகளின் பேராசையா ? மூன்றாவது கேள்வி சரியில்லை . 06-Sep-2019 6:11 pm
மக்களின் அறியாமையே காரணம் தன் பொறுப்புணர்வை அறியாமை தன் ஆசையின் அளவை அறியாமை (அறியாமைக்குள் அனைத்தும் அடங்கிவிடுகிறது) 06-Sep-2019 4:43 pm
Ebinesar521 - san அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2019 1:05 pm

பாகற்காய்

மேலும்

பாகு +அல்+காய் 06-Sep-2019 5:57 pm
பாகற்காய்! பாகு+அல்+காய் இதோட சிறப்பு பாகு =இனிப்பு அல்=அல்லாத காய்=காய் இனிப்பு அ(இ)ல்லாத காய் 06-Sep-2019 11:30 am
பாகு+அல்+காய் 03-Sep-2019 2:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே