கணவனைப்போல் ஏற்றதுணை – பொருளொன்று ஈற்றடி பல
நேரிசை வெண்பா
கணவனைப்போல் ஏற்றதுணை கன்னியர்க்கு யாரே?
உணர்ந்தவர்க்(கு) உண்டிங்கே உய்வு! – வணங்கி
அவன்றோளைப் பற்றிநின்(று) ஆதரித்தால் என்றும்
அவலமே அண்டா(து) அருகு. 1
கணவனைப்போல் ஏற்றதுணை கன்னியர்க்கு யாரே?
உணர்ந்தவர்க்(கு) உண்டிங்கே உய்வு! – வணங்கி
அவன்றோளைப் பற்றிநின்(று) ஆதரித்தால் வாழ்வில்
துவர்ப்பில்லை என்றே துணி. 2
கணவனைப்போல் ஏற்றதுணை கன்னியர்க்கு யாரே?
உணர்ந்தவர்க்(கு) உண்டிங்கே உய்வு! – வணங்கி
அவன்றோளைப் பற்றிநின்(று) ஆதரித்தால் வாழ்வில்
கவலையில்லை என்றே கருது. 3
.
கணவனைப்போல் ஏற்றதுணை கன்னியர்க்கு யாரே?
உணர்ந்தவர்க்(கு) உண்டிங்கே உய்வு! – வணங்கி
மலைபோன்ற கண்ணனைய மன்னவனைப் பற்ற
நிலைத்திடுமே இன்பம் நிறைந்து. 4
.
கணவனைப்போல் ஏற்றதுணை கன்னியர்க்கு யாரே?
உணர்ந்தவர்க்(கு) உண்டிங்கே உய்வு! – வணங்கி
அமிழ்தம்போல் வாழ்வை யடைந்து பயந்த.
எமனையும் வெல்வாய் எளிது! 5