ஊடகத் தொல்லை

என்ன இந்த உலக மக்கள்
புது சிந்தனைத் தோன்றவில்லை
பொது நலமும் சிறிதும் இல்லை
அரசாங்கத்தை அமைத்து விட்டு
அவர்களிடம் கையை ஏந்தும்
அவல நிலையில் உழலும் நிலை.

வருடந்தோறும் பருவநிலையால்
உலகில் மாற்றம் பெரிய தொல்லை
உடலை மாற்றும் உணவுக் கொள்ளை
உயிரோடு பயணிக்க உத்திரவாதமில்லை
உண்மையைக் கேட்க ஒருவரும் இல்லை
உலகின் எல்லை ஒரு விரலுக்குள்ளே.

தொழிலில் கூடத்தனித்த நிலையும் இல்லை
அரசு ஊழியத்திலும் அதிகத்தொல்லை
இலவசத்தை நம்பி உயிர் வாழும் நிலை
கருவை உருவாக்கும் புது கலப்பட சந்தை
கடத்தி உயிர்ப் போக்கும் காமுகனாய் ஆண் பிள்ளை
கல்வியில் கூட சமயத்தால் கேவலக் கொலை

நினைத்து வருந்த மக்கள் தயாராய் இல்லை
நிவர்த்தி செய்ய அரசிடம் ஆலோசனை இல்லை
பொய்த்த செய்தியை புகுத்தும் ஊடகத் தொல்லை
பொருப்பில்லா மக்கள் அலைபேசியில் கடலை
புண்ணாக்குக்கு கூட பல மடங்காச்சு விலை
புரிந்துக்கொள்ளும் வரையில் எல்லோருக்கும் தொல்லை
- - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Dec-19, 9:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 78

மேலே