என்னோடு தினம் - 2
விவரமறியும் பருவம்
முன்னே என்
கையோடு உன் மெய் சேர்த்தாய்
*
வாழ்வோடு பிணைந்து
என் அறிவை எனக்கு
அறிய செய்தாய்
**
தேர்வில் எனக்கு தோள்
கொடுத்தாய்
சில நேரங்களில்
களங்கமிலா கைகளையும்
கறைப் படுத்தினாய்
***
கால மாற்றத்தில் இன்று
என் கைகளில் சில நிமிடங்களே
ஏந்திருக்கும்
எழுதுகோலே ...
****
நீயில்லாமல் நானில்லை
உன் உறவில்லை என்றால்
எனக்கில்லை ஒரு உறக்கம்
*
உன்னோடு என் கனவு
உன்னோடு என் கவிதை
உன்னோடு என் அழுகை
**
பஞ்சான உன்மேனியை
பதம் பார்த்தும்
என் காலடியில் கிடத்தியும்
என் தலை கணம் தாங்கினாய்
***
தரையோ பட்டுமஞ்சமோ
உன் உறவே
எனக்கு உன்னதம்
****
இரவின்மடியில் மட்டுமின்றி
பகலிலும் உறக்கம்.
என் அருமை தலையணையே ...
*****
- செல்வா