கண்ணன் குழலோசை
சிறு பிள்ளையவன்
கடல் வண்ணன்
கட்டியதோ இடையில்
மஞ்சள் பட்டு பீதாம்பரம்
கைகளில் வளையல்
காலில் தங்க கொலுசு
தலையில் மயிர்ப்பீலி
கையில் வேய்ங்குழல்
வாயில் வைத்து ஊதுகிறான் கண்ணன்
ஆய்ப்பாடி பசுக்களெல்லாம் அவன் பின்னே
கன்றுகளை மறந்து பசுக்கள்
தாய்ப்பசுவை மறந்த கன்றுகள்
அவன் பின்னே ஆய்ப்பாடி ஆச்சியரெல்லாம்....
வீடு துறந்து..........பணிகளெல்லாம் மறந்து
உற்ற கணவரையும் பிள்ளைகளையும் மறந்து
கண்ணா... கண்ணா என்று அவன் தாள் தேடி
உலகமே அந்த மாயவன் குழல் கீதத்திற்கு
விளக்கைக் கண்ட விட்டில் போல் ...
அதோ அதோ எனக்கும் கேட்கிறது
அவன் கீதம்......
இதுவே படைப்புக்கும் படைத்தவனுக்கும்
இடையில் ..... பிணைப்பு.... காதல்
காதல் இதுவே