அவன் ஸ்பரிசம்

முதல் முறையாய் நீ
என்னைக் கட்டியணைத்தபோது
இன்பத்தின் உச்சக் கட்டத்தில்
இருப்பதாய் நான் உணர்ந்தபோது
உன் ஸ்பரிசம் என்னுள்ளத்தில்
மலரா மொட்டாய் இருந்த
தாமரையை மலரவைத்தது
அதுவே நம் காதல் பூ
வெய்யோன் நீ மலரவைத்த
காதல் தாமரைப் பூ
என்றாள் அவள் என் காதலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Dec-19, 1:47 pm)
Tanglish : avan sparisam
பார்வை : 165

மேலே