ஒரு மாறுதலுக்காக For A Chance
ஒரு மாறுதலுக்காக...
உன்னிடமே பேசிப் பார்...
உளறி விடாதே...
பைத்தியம் என்பான்
பக்கத்து வீட்டுக்காரன்....
ஒரு மாறுதலுக்காக...
மோட்டார் வாகனம் விடுத்து
மிதிவண்டி பயணம் செய்.....
இப்பொழுதேனும் வேகத்தடைகளை மதி...
நிதானம் கொள்...
உலகை ரசி...
ஒரு மாறுதலுக்காக...
பெற்றோரிடம் ஆசி பெறு....
காலில் விழாதே...
கட்டி அணை...
முடிந்தால் ஒரு முத்தமிடு...
உலகம் எழும் முன் விழித்துக்கொள்...
காலை வணக்கம் சொல் கதிரவனுக்கு...
ஒரு மாறுதலுக்காக...
ஆயுதம் செய்...
அவ்வப்போது வெளிக்கொணர்...
பயன்படுத்தாதே...
உரிமைக்காக குரல் கொடு...
உரிய இடத்தில் கோபப்படு...
அவ்வப்போது பொய் சொல்...
எப்போதாவது உண்மை பேசு...
நாவடக்கம் கொள்...
ஊமையாய் இருக்காதே...
ஒரு மாறுதலுக்காக...
அரசியல் கற்றுக் கொள்...
அதிகாரத்திற்கு ஆசைப்படாதே...
தனித்து நில்...
கூட்டத்தில் ஒருவனாய்...
கண்ணாடி பிம்பம் காண்...
கவலை மறந்து சிரி...
ஒரு மாறுதலுக்காக...
மழையில் நனை...
மானுடம் போற்று...
மனிதனை மதி...
பிறர் சொல் கேளாதே...
பிடித்ததை செய்...
பிடிவாதமாய் இரு...
ஒரு மாறுதலுக்காக...
முட்களை கடந்து செல் பூக்கள் வசப்படும்...
பூவின் மணம் நுகர்...
புதியதோர் மாற்றம் கொள்...
பகல் தூக்கம்கொள்...
சொப்பனம் காணதே...
ஒரு மாறுதலுக்காக..
புதிர்களை புரிந்து கொள்...
திட்டமிடு...
தீர்வை கண்டறி....
குறைவாக கேள்...
அதிகம் கவனி...
பார்வையை கூர்மையாக்கு....
தேடலை விரிவுபடுத்து...