கடல்அகம் நிறைந்த அளவில்லா அதிசயம் யுகம் நிறைந்த கடல்.

ஆனந்தம் தரும் கடற்கரை என்றும் மிகுந்திடும் சிறப்பு காதலர்க்கு.

இயற்கையை கண்டு ரசிக்க யாவரின் மனம் விரும்புவது கடல்.

ஈக்கள் மொய்க்காது அழகூட்டும் கடல் உருவாக்க உலபுவர் பொறுப்பு.

உப்பு தரும் கடல் நீர் உப்பை அளவோடு உபயோகித்தால் மிக நன்று.

ஊறு நேராது உலகு இயற்கை சீற்றம் கடலில் புகுந்து கலக்கும் வரை.

எது கண்டு அஞ்சாத கடலும் சில நேரம் உள்வாங்குவது பாரினில் வியப்பு.

ஏனென்று புரியாத புதிர் கடலுள்ளும்
கடலை அறிபவர் தமக்கு.

ஐந்தில் கற்ற நீச்சல் ஐம்பதிலும் பலன் கடலினுள் உழைப்போர் தமக்கு.

ஒன்றைப் பற்றி சிந்தித்து ரசிப்பதற்கு சிறப்பாய் எதிர்நிற்கும் கடல்.

ஓயாத கடல் அலையால் மனம் துள்ளும் கண்ணால் காண்பவர் தமக்கு.

ஔ என்பது உயிரெழுத்து மீனவருக்கு கடலே என்றும் உயிர் மூச்சு.

எழுதியவர் : அலாவுதீன் (8-Dec-19, 12:39 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : kadal
பார்வை : 113

மேலே