வே வினோத்குமாா் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  வே வினோத்குமாா்
இடம்:  ஈரோடு,தமிழ்நாடு
பிறந்த தேதி :  29-Jun-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2019
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  6

என் படைப்புகள்
வே வினோத்குமாா் செய்திகள்
வே வினோத்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2019 3:07 pm

ஒரு மாறுதலுக்காக...
உன்னிடமே பேசிப் பார்...
உளறி விடாதே...
பைத்தியம் என்பான்
பக்கத்து வீட்டுக்காரன்....

ஒரு மாறுதலுக்காக...
மோட்டார் வாகனம் விடுத்து
மிதிவண்டி பயணம் செய்.....
இப்பொழுதேனும்  வேகத்தடைகளை  மதி...
நிதானம் கொள்...
உலகை ரசி...

ஒரு மாறுதலுக்காக...
பெற்றோரிடம் ஆசி பெறு....
காலில் விழாதே...
கட்டி அணை...
முடிந்தால் ஒரு முத்தமிடு...

உலகம் எழும் முன்  விழித்துக்கொள்...
காலை வணக்கம் சொல் கதிரவனுக்கு...

ஒரு மாறுதலுக்காக...
ஆயுதம் செய்...
அவ்வப்போது வெளிக்கொணர்...
பயன்படுத்தாதே...

உரிமைக்காக குரல் கொடு...
உரிய இடத்தில் கோபப்படு...

அவ்வப்போது பொய் சொல்...

மேலும்

வே வினோத்குமாா் - வே வினோத்குமாா் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2019 7:39 am

இரு சக்கர வாகனத்தில்,என்னை இறுக்கி அணைத்தபடி...
இனியளுடன் ஒரு பயணம்...

நீண்ட பாதையிலே  நெருக்கங்கள் குறைந்து விட...
கனவுலகம் சென்று விட்டோம்...
(காலங்கள் கழிந்தன கனவினிலே..)

நெடுந்தொலைவு  சென்ற பின்னே...
நிழல் உலகம் மீண்டுவிட்டோம்.....
வேகத்தை குறைத்து விட்டு.... வேடிக்கை பார்க்கும் போது....
 
புல்வெளி மத்தியிலே முயல் கூட்டம் முன்னேற....
பட்டாம்பூச்சி ஒன்று
இனியவளின் இதழ் அருகே...
தேன் பருக பக்கம் வர...
நீல வானத்திலே நீந்தும் மேகங்கள் ஆனந்த கண்ணீர் சிந்த...
நனைந்தோம் காதல் மழையில்.....

02-Feb-2019 9:58 pm

சில மௌனங்கள் சத்தமாய் கேட்டன என் காதுகளில்....
அவர்களின் அமைதி யுத்தங்களை நிகழ்த்தியது...

தென்னையும்,பனையும் திசைக்கொன்றாய் சிதறின....
கரைசேர்ந்த கப்பல்களோ கட்டுமரங்களாய் காட்சியளித்தது....

காணும் இடமெல்லாம் கசிந்த நீர் சுவடுகள்; அஃது புயலின் தாக்கமா?இல்லை *புல(உழ)வனின் கண்ணீரா?....

நட்ட பயிர்களும்,இட்ட விதைகளும் வழக்காடுகின்றன ....நஷ்ட இழப்பீடுக்காக....

பலர் வீட்டுடைமைகளை இழந்தனர்...
பாவம்,இன்ன பிறரோ வீடுகளை இழந்தனர்....
உடைந்த மரங்களை கண்டு பலர் மனமுடைந்தனர்....
மடிந்த பயிர்களை கண்டு சிலர் மடிந்துவிட்டனர்...

நிவாரண பொருட்களின் நிலைமை நிற்கின்றது,அதிகாரத்தின் ஆணைக்குப்பின்

மேலும்

வே வினோத்குமாா் - வே வினோத்குமாா் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2019 8:07 am

ஓடையில மீன்ஓட.....
ஓரத்துல நா நடக்க.....
ஒத்தயடி பாதையில பான.
கொண்டு  ஒருத்தி வந்தா.....
அவ தண்ணி எடுத்து போகயில.
தடுமாறி விழுந்தேனே......
திரும்பி பாத்து சிரிச்ச சிரிப்பில்.
சின்னாபின்னம் ஆனேனே....

மேலும்

வே வினோத்குமாா் - வே வினோத்குமாா் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2019 8:20 am

அந்த ஆசிரியர் மிக கண்டிப்பானவர்... நாங்களோ தந்திரமானவர்கள்....

அவர் பார்க்காத  நேரம், எங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும்.....
அவர் காணாத சில நேரம்,
வினாத்தாள்கள் இடம் மாறும்,சில விளையாட்டும் அறங்கேறும்.....

புரியாத பாடங்கள்,சுழலும் மின்விசிறி, அறையிலோ மயான அமைதி...
சுற்றிப்பார்க்கும் சிலரும் சோர்ந்து விடுவர் அந்த அமைதியின் சப்தத்தில்...

கணிதவியல் இயந்திரம் கைமாறும்போதெல்லாம்,
கவனம் சற்று அதிகமாகவும்.... ஆசிரியருக்கு;

வெகு சிலரே எழுதிய பக்கங்களை திருப்பி பார்ப்பர்....
மற்றவரோ திரும்பி பார்த்து பக்கங்களை நிரப்புவர்....

அந்த அமைதியின் சப்தத்தில் அனைவரும் உறங்கிவிடுவர்...

மேலும்

வே வினோத்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2019 7:45 pm

அதிகம் பேசாத, இஸ்லாமிய பெண்
அவள்...ஏனோ,என்னுடன் மட்டும்
காதல் சண்டையிடுகிறாள்....
கண்களால்...

அவளை காணாத சில காலம்....
என் வீட்டு ரோஜா செடியும் பூக்க
மறுக்கிறது....

அவள் அழகை என்னவென்று
சொல்வது....வைரமுத்து
கவிதைகளும் வசைபாடும்.... ரவி வர்மா ஒவியங்களும் வெட்கப்படும்.....

பர்தாக்குள் ஒளிந்திருக்கும் பாவை
காண்பேனா?....
கண்டவுடன் காதல் சொல்வேனா?....
சொன்னவுடன் என்னவள் என்
செய்வாள்?....
உதறிப்போவாளோ?..... உண

மேலும்

வே வினோத்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2019 8:20 am

அந்த ஆசிரியர் மிக கண்டிப்பானவர்... நாங்களோ தந்திரமானவர்கள்....

அவர் பார்க்காத  நேரம், எங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும்.....
அவர் காணாத சில நேரம்,
வினாத்தாள்கள் இடம் மாறும்,சில விளையாட்டும் அறங்கேறும்.....

புரியாத பாடங்கள்,சுழலும் மின்விசிறி, அறையிலோ மயான அமைதி...
சுற்றிப்பார்க்கும் சிலரும் சோர்ந்து விடுவர் அந்த அமைதியின் சப்தத்தில்...

கணிதவியல் இயந்திரம் கைமாறும்போதெல்லாம்,
கவனம் சற்று அதிகமாகவும்.... ஆசிரியருக்கு;

வெகு சிலரே எழுதிய பக்கங்களை திருப்பி பார்ப்பர்....
மற்றவரோ திரும்பி பார்த்து பக்கங்களை நிரப்புவர்....

அந்த அமைதியின் சப்தத்தில் அனைவரும் உறங்கிவிடுவர்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே