அவள்

அதிகம் பேசாத, இஸ்லாமிய பெண்
அவள்...ஏனோ,என்னுடன் மட்டும்
காதல் சண்டையிடுகிறாள்....
கண்களால்...

அவளை காணாத சில காலம்....
என் வீட்டு ரோஜா செடியும் பூக்க
மறுக்கிறது....

அவள் அழகை என்னவென்று
சொல்வது....வைரமுத்து
கவிதைகளும் வசைபாடும்.... ரவி வர்மா ஒவியங்களும் வெட்கப்படும்.....

பர்தாக்குள் ஒளிந்திருக்கும் பாவை
காண்பேனா?....
கண்டவுடன் காதல் சொல்வேனா?....
சொன்னவுடன் என்னவள் என்
செய்வாள்?....
உதறிப்போவாளோ?..... உண்மை
உணர்வாளோ?.....

விழி ஓர பார்வையிலே உந்தன்
முகம்,
மறையும்போது,நானும்
கறைகின்றேன் கண்ணீராய்.......

எழுதியவர் : வே.வினோத்குமாா் (21-May-19, 7:45 pm)
சேர்த்தது : வே வினோத்குமாா்
Tanglish : aval
பார்வை : 293

மேலே