டெல்டாவை நோக்கி ஒரு பயணம்
சில மௌனங்கள் சத்தமாய் கேட்டன என் காதுகளில்....
அவர்களின் அமைதி யுத்தங்களை நிகழ்த்தியது...
தென்னையும்,பனையும் திசைக்கொன்றாய் சிதறின....
கரைசேர்ந்த கப்பல்களோ கட்டுமரங்களாய் காட்சியளித்தது....
காணும் இடமெல்லாம் கசிந்த நீர் சுவடுகள்; அஃது புயலின் தாக்கமா?இல்லை *புல(உழ)வனின் கண்ணீரா?....
நட்ட பயிர்களும்,இட்ட விதைகளும் வழக்காடுகின்றன ....நஷ்ட இழப்பீடுக்காக....
பலர் வீட்டுடைமைகளை இழந்தனர்...
பாவம்,இன்ன பிறரோ வீடுகளை இழந்தனர்....
உடைந்த மரங்களை கண்டு பலர் மனமுடைந்தனர்....
மடிந்த பயிர்களை கண்டு சிலர் மடிந்துவிட்டனர்...
நிவாரண பொருட்களின் நிலைமை நிற்கின்றது,அதிகாரத்தின் ஆணைக்குப்பின்னே..கையில் சிக்காத காற்றாய்......
சாய்ந்த மின்கம்பங்கள் கடத்துகின்றன....மக்களின் உணர்வுகளை.... மின்சாரத்திற்காக....
*ஏனோ, எம் கவிதையில் உழவன், புலவனாக்கப்பட்டான்....அஃது சொல்சுவையோ, பொருட்சுவையோ அன்றி, அறுசுவை தருவதினால்.....