தேர்வறையில்
அந்த ஆசிரியர் மிக கண்டிப்பானவர்... நாங்களோ தந்திரமானவர்கள்....
அவர் பார்க்காத நேரம், எங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும்.....
அவர் காணாத சில நேரம்,
வினாத்தாள்கள் இடம் மாறும்,சில விளையாட்டும் அறங்கேறும்.....
புரியாத பாடங்கள்,சுழலும் மின்விசிறி, அறையிலோ மயான அமைதி...
சுற்றிப்பார்க்கும் சிலரும் சோர்ந்து விடுவர் அந்த அமைதியின் சப்தத்தில்...
கணிதவியல் இயந்திரம் கைமாறும்போதெல்லாம்,
கவனம் சற்று அதிகமாகவும்.... ஆசிரியருக்கு;
வெகு சிலரே எழுதிய பக்கங்களை திருப்பி பார்ப்பர்....
மற்றவரோ திரும்பி பார்த்து பக்கங்களை நிரப்புவர்....
அந்த அமைதியின் சப்தத்தில் அனைவரும் உறங்கிவிடுவர்....
அவன் மட்டும் அரைமணி நேரம் அதிகம் கேட்பான்...கூடுதல் தாள்களும் குறைந்து போகும்....
தேர்வறைக்கு வெளியே என் எண்ணங்கள் கைகொட்டி சிரிக்கின்றன ஏன் இந்த நிலைமை என்று?....
கடன் வாங்கிய பொருட்கள் கைமாறும் கடைசி ஐந்து நிமிடத்தில்...விடையுடன்...
இனம் புரியாத பயம் ஒன்று எட்டிப் பார்க்கும்... தேர்வின் முடிவை எண்ணி...
நானும் தேர்வறையில் எழுதுகிறேன்.... இக்கவிதையை.... இன்று....