தேர்தல்

தேர்தல்...!

ஓட்டு போடுங்க...!
அத பாத்து போடுங்க...!
சேவை செய்யா வேட்பாளரை தூக்கிப்போடுங்க...!

ரத்தம் சிந்தி பொறந்ததிந்த ஜனநாயகங்க...!
அத வெத்துவேட்டு. பயலுக்காக வீணாக்காதீங்க...!
ஓட்டு போடுங்க...!
அத பாத்து போடுங்க...!
ஓட்டுக்காக நோட்டு தந்தா தூக்கிப்போடுங்க...!


அஞ்சுவருசம் ஒருதடவ ஆட்சி மாற்றங்க....!
அத அஞ்சாம தேர்வுசெய்ய ஒட்டு போடுங்க...(2)
சேர்த்து போடும் வாக்கு முழுசும் நாட்டுக்காகங்க...
கொஞ்சம் சோம்பேறி இல்லாம ஓட்டு போடுங்க...!
விரலு மேலதான்...
மைய வச்சுபாருங்க...
இங்க நிச்சயமா நன்ம நடக்கும் கொஞ்சம் கேளுங்க...!

ஓட்டு போடுங்க...!
அத பாத்து போடுங்க...!
ஓட்டுக்காக நோட்டு தந்தா தூக்கிப்போடுங்க...!


தேர்தல் நேர நாடகங்கள் கணக்கில்லங்க..
பொய் வாக்குறுதி வரும்போது வெலகி நில்லுங்க...(2)
வெள்ள சட்ட பாத்து மட்டும் மயங்கீறாதிங்க
அது உள்ள இருக்கும் நேர்மையையும் சேர்த்து பாருங்க...!
வாய்ப்பு கொடுங்க...!
நாட்ட வாழ வையுங்க...!
இந்த சாக்கடைய சுத்தம்பன்ன விரல தூக்குங்க...!

ஓட்டு போடுங்க...!
அத பாத்து போடுங்க...!
ஓட்டுக்காக நோட்டு தந்தா தூக்கிப்போடுங்க...!

ரத்தம் சிந்தி பொறந்ததிந்த ஜனநாயகங்க...!
அத வெத்துவேட்டு. பயலுக்காக வீணாக்காதீங்க...!
ஓட்டு போடுங்க...!
அத பாத்து போடுங்க...!
ஓட்டுக்காக நோட்டு தந்தா தூக்கிப்போடுங்க...!

💐💐💐😊😊😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (30-Mar-19, 3:18 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 60

மேலே