கிழக்காதலர்கள்
சுற்றி பசுமைத்தோட்டம்...
நடுவில் ரோஜாக்கூட்டம்…
வானோ மேக மூட்டம்…
அருகில் நீரின் ஓட்டம்…
அவனோ வாட்டசாட்டம்..
அவளுக்கு அவன் மேல் நாட்டம்..
கனவில் ஆட்டம்பாட்டம்..
எஙகிருந்தோ ஒரு இயக்கம்…
அருகில் சென்றால் மயக்கம்..
ஏனோ வந்தது தயக்கம்…..
வந்தது இருட்டுப்போர்வை..
அவள் மேல் அவனின் பார்வை..
நடந்தது கைகளின் கோர்வை..
தந்தது காதலின் தீர்வை.
காதல்…
திருமண உறவிலும்..
உற்சாகமாய் பயணிக்கத் தொடங்கியது..
முழுமைக்காதல்
முப்பது வருடங்களைக் கடந்தும்
கலைப்பின்றி பயணித்தது..
முதுமைக் காதலர்கள்
காதல் மலர்ந்த இடத்தை
காணச்சென்றார்கள்…
அங்கே
பசுமைத்தோட்டமும் இல்லை..
ரோஜாக்கூட்டமும் இல்லை….
ஆனால்
அந்த கிழக்காதலர்கள்...
முதல் பார்வையின்
மொழியை உணர்ந்தார்கள்.
முதல் தீண்டலின் ஆழத்தை
உணர்ந்தார்கள்…
காதல் சொன்ன கணத்தை
உணர்ந்தார்கள்..
முதன் அணைப்பின்
கதகதப்பை உணர்ந்தார்கள்..
ஆம்
இதை முப்பது வருடம் கடந்த
முதுமை காதலர்கள் மட்டுமே
உணர முடியும்…
கூந்தல் நரைத்திருக்கலாம்..
தேகம் தேய்ந்திருக்கலாம்..
தாகம் ஓய்ந்திருக்கலாம்..
கிழவனுக்கு கிழவி தான் தேவதை..
கிழவிக்கு கிழவன் தான் மன்மதன்.
காவியக் காதலர்கள்..