பிடிக்கும் பிடிக்கும்
மொட்டை மாடியில்
இருட்டு போர்வையில்
நிலவின் பார்வையில்
வார்த்தை கோர்வையில் கவிதைகள் படைத்திட
பிடிக்கும் பிடிக்கும் …
புலரும் காலையில்
பசுமை சோலையில்
பிடித்த சேலையில்
ஒத்தையடி பாதையில்
ஒத்தையாய் நடந்திட
பிடிக்கும் பிடிக்கும்…
தன்னந் தனிமையில்
இரவின் மடியினில்
கவிஞனின் மொழியினில்
இளையராஜா இசையினில்
முழுதாய் நனைந்திட
பிடிக்கும் பிடிக்கும்...
ஏனோ மனதினில்
பாரம் வருகையில்
தனிமையில் அழுகையில்
அம்மா மடியினில்
ஆழமாய் அழுதிட
பிடிக்கும் பிடிக்கும்….
மாமன் பிரிகையில்
தூரம் செல்கையில்
சோகம் வருகையில்
சுகமாய் வலிக்கையில்
கரைந்திடும் கண்ணீர்
பிடிக்கும் பிடிக்கும்..
என்னை நினைக்கையில்
தன்னை மறக்கையில்
கருத்து சிறக்கையில்
கவிதை பிறக்கையில்
என்னை எனக்கே
பிடிக்கும் பிடிக்கும்….