ஒரு இஸ்லாமியன் கேட்கிறேன்

என் இருப்பினை
உறுதி செய்வது எவ்வாறு??
பேசினால்
தேசத்துரோகி ஆவேனோ??
எழுதினால்
வன்முறை விதைத்தவனாவேனோ???
மௌனமாயிருந்தால்
சதிகாரன் ஆவேனோ??
தீவிரவாத அடையாளம் வேறு
எப்போதும் தயாராய் இருக்கிறது..
பட்டாசு வெடித்தால்
வெடிகுண்டென பேசப்படுவேனோ?
ஆடறுப்பதற்கே அஞ்சுபவன்
அவ்வளவு எளிதாய்
பயங்கரவாதியாய்
அடையாளம் தரிப்பான்..
இந்திய இஸ்லாமியனுக்குத்தான்
எத்தனை கடமைகள்!!!
தான் அப்பாவி என்பதை
உறங்கும்போதும்
நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்..
தேசபக்தர்களிடம் யாராவது
கேட்டுச்சொல்லுங்கள்
என் இருப்பினை
உறுதிசெய்வது எவ்வாறு?

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (18-Dec-19, 9:25 pm)
பார்வை : 101

மேலே