அவளின் மனசாட்சி
அவளின் மனசாட்சி
ஏனடி அவனை இப்படி சோதிக்கிறாய்.
நிழல் போல் உன்னை நீ போகும் இடமெல்லாம் தொடருபவனை
ஏன் உன் மனம் ஏற்க மறுக்கிறது.
அவன் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ அவனுக்கு உண்டு, இல்லை என்று ஏன் சொல்ல மறுக்கிறாய்.
ஏன் இந்த தடுமாற்றம்.
ஒரு மனம் அவன் காதலை
ஆராதனை செய்கிறது.
இன்னொரு மனம் வேண்டாம் என்று தடுக்கிறது.
ஆசை மனம் அனுபவிக்கிறது.
காதலை மறுக்கின்ற மனம் உன்னை பயமுறுத்துகிறது.
அச்சம் உன்னை அலைகழிக்கிறது.
ஆனந்தம் உன்னை கற்பனையில் அவனுடன் டூயட் பாட செய்கிறது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் அவன் மிக நல்லவன் தான்.
அப்ப அவனிடம் உன் சம்மதத்தை சொல்ல போகிறாய்.
என்னடி மீண்டும் உன் கண்களில் சந்தேகம் துளிர் விடுகிறது
பாவம்டி அவன்
உன்னை போல் ஒரு ஊர்காய் போடுகிற ஆளை தேர்ந்தெடுத்து விட்டான்.
என்ன வேண்டுமானாலும் செய்
இது உன் காதல்
உன் வாழ்க்கை
என்ன! இன்றைய உன் ஆடை அலங்காரம்,
அவனிடம் உன் காதலை வெளிப்படுத்த போவது போல் உடல் மொழி உள்ளது
என்னடி மெளனம்
மெளனம் சம்மதம் என்று எடுத்து கொள்ளலாமா....
உன் இஷ்டம்,
இறுதியாக, காதல் உன் உரிமையடி
-உன் மனசாட்சி
- பாலு