பிரிவோம் சந்திப்போம் 555

கண்ணே...


அந்த பேருந்தில் உன்னிடம்
என் பாடநூல் வைக்கும்படி...

உதவி கேட்டு
அறிமுகமானேன் உன்னிடம்...

சாலையை அவசரமாய்
கடக்கும்போது...

எதிரே நின்று
கையசைத்து புன்னகைத்தாய்...

பேருந்துக்காக பாடநூல்களுடன்
பேருந்தில் காத்திருந்தாய்...

உன் தோழிடம் பேசி
என்னிடம் சிரித்தாய்..

அருகில் வந்தேன் என்
விவரம் கேட்டறிந்தாய்...

உன் விவரம் கேட்டேன் அவசியமா
என்கிறாய் புன்னகைத்து...

ஒருவார்த்தை மட்டும் உதடுவரை
வந்து செல்கிறது...

நாம் எப்போது மீண்டும்
சந்திப்போம் என்று.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Dec-19, 8:47 pm)
பார்வை : 341

மேலே