கவி எழுத விடு


எனக்கான நேரத்தில்
உனக்காக கவி எழுதி
வார்த்தைகளை கோர்த்து
வாஞ்சையுடன் காத்திருக்க….

ஒற்றை பார்வை கொண்டு
கற்றை வார்த்தைகளை
கண்களால் களவாடி
கலவரம் செய்தாயடி…

நீ
சிரித்து சிரித்து
சிந்தும் கவி..
சிந்தனையை சிதைத்து
சிக்கிக்கொள்ள வைத்ததடி..

உன்
பார்வை
சொன்ன மௌனகவி

கருத்தில் சென்று கலந்து

கற்பனையை குலைத்ததடி...


கண்மூடி கவி எழுத

முயற்சித்தும் முடியவில்லை...

கற்பனையில் உன்முகம் வந்து

முட்டுக்கட்டை போட்டதடி..


ஒரு கவி மட்டும்

எழுத விடு...

கருணை கொஞ்சம்

காட்டி விடு.

எழுதியவர் : பானுப்பிரியா ராமநாதன் (18-Dec-19, 8:24 pm)
Tanglish : kavi elutha vidu
பார்வை : 410

மேலே