அதர முத்தம் நித்தமுமா

வெண்பா

அதர முத்தம்

நித்தம் மெதற்கதர முத்தப்பா டல்கண்டாய்
மொத்தம் இலைமறைக் காயறிநீ -- பித்தாய்
யெதற்கு கரைந்துமே வேறுபணி அற்றாய்
பதறுவளக் காதலியும் காண்

இலக்கியம் கற்று இலக்கணப் பாட்டில்
இலகுவாய் காதல் எழுத -- பிளந்திடு
சொற்களை கற்பாய் இலக்கியமும் காதலும்
தொற்றாத் துரத்துமற்ற தை

எழுதியவர் : பழனி ராஜன் (19-Dec-19, 8:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே