இயற்கை எழில்
பச்சை நிறம்
எனக்கு இச்சை நிறம்
பச்சை பசேலென்று காணும்
பயிர் நிலங்கள்
கண்ணுக்கு விருந்து
மனதிற்கு குளிர்ச்சி
அதோ அந்த மாமரத்து கிளி
பச்சைக்கிளி அது அலகோ சிவப்பு
பச்சையுடன் சேர்ந்த சிவப்பு ....
மனத்தை விட்டு அகலா கொள்ளை அழகு
இயற்கைக்கும் பச்சை நிறம்
இச்சை நிறமோ .....
காணும் வயல்களில் பரந்து நிற்கும் பச்சை
மாமலைகளுக்கு போர்வையாய்
கானகத்துப் பச்சை
நீல நிறம் .....
கடல் நீலம், வான் நீலம்
மழைமேகம் நீலம்
மாலவனும் ஈசனும் நீலம்
என்று சொல்லும் மறை
நீல வானில் முத்துப் படகு
மெல்ல மிதந்து போகுது நிலவாய்
நீளத்தில் வெண்மை...
இயற்கை தரும் வண்ண கோலம்
இளங் காலையில்
சிவந்த வானம்
கொள்ளை அழகு
மாலையில் ஆதவன்
மேற்கில் மெல்ல இறங்க
மஞ்சள் பூத்த வானம் .....
சாமந்தி போர்த்த வானம்
அச்சோ என்ன அழகு
அந்தி நேரம் மனதை
மயக்கும் இன்ப நேரம்
மஞ்சளானது
வெள்ளை பனியாடையில்
வெள்ளி மலைத் தொடர்கள் .....
இமயமாய்.......
வெள்ளை வெண் புறாக்கள்
kaalgalil அமைதி மடல்கள் ஏந்தி
மன்னரையும் காதலரையும்
வாழவைத்த தூதுவரோ .....
வெள்ளையாய் மிளிரும் அமைதி!
பெண்ணிற்கு நடைப் பயில வைக்கும்
அன்னம் வெள்ளை
போரின் இடையே அமைதிக்கு
வெள்ளைக்கொடி .........
அதோ பார் வானில்
இன்று வந்த வானவில் ...
விண்ணோடு மண்ணை சேர்க்கும் வில்
நம் கண்களுக்கு விருந்தளிக்கும்
ஏழு நிற இந்திரன் வில்
இயற்கையில் இயற்கை நிறங்கள்
நம் மனத்தைக் குளிரவைக்கும் வண்ணங்கள்