வானமும் பூமியும்

மழைக் காமூகன் பொழியும்
முத்த மழையை

தடுத்துவிட நினைத்து கொண்டு
வந்த குடையை

அவன் நண்பன் காற்று வந்து
தள்ளிவிட்டான்

ஆவேச முத்தமும் குளிர்ச்சியான
தழுவலுமாய்

என் பெண்மையை சுவைப்பதை
தடுக்க

போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை
எடுக்குமா

வானமும் பூமியும்..,

எழுதியவர் : நா.சேகர் (21-Dec-19, 8:08 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaanamum boomiyum
பார்வை : 773

மேலே