காதல் ♥️♥️
காதல்💘
குயிலென உன் குரல் கேட்க ஓடோடி வந்தேன்.
மயிலென தோகை விரித்தாடும் உன் நடனத்தை பார்க்க ஓடோடி வந்தேன்.
முகிலினங்கள் மூடி மறைத்த அழகிய நிலவே!
இதழ்களில் பனித்துளி உறங்கும் வண்ண மலரே!
மயக்கும் கண்களால் இதயத்தில் காதல் ஏற்படுத்திய என் உயிரே!
தென்றல் தாலாட்டும் ஒடியாமல் அசைந்தாடும் நாணலே!
தாமரை பாதத்தால் மெல்ல தடம் பதிக்கும் எழில் ஓவியமே!
முக்கனி சுவையை தேனுடன் கொழைத்து இன்ப தமிழ் உச்சரித்து சொக்க வைக்கும் செவ்விதழாளே!
காலத்தால் அழியாத காதல் பயில்வோம் வா!
கன்னி தமிழை அனுதினமும் பயின்று சங்க இலக்கியம் படைப்போம் வா!
உன் கண் அசைவுக்கு
நான் காத்திருக்க,
காதலால் நீ காலம் தாழ்தாமல் உன் ஒர பார்வையால் புண்ணகைக்க,
பாவை உனது ஆசை எனக்கு புரியவர,
உன் அந்தபுரம் வந்தேன் உன் அனுமதியுடன்.
கொலு மண்டபத்தின் நடுவில் அமர்ந்து இருக்கும் நீ!
உலகில் உள்ள ஒட்டு மொத்த அழகையும் சுமந்து வந்த அழகிய தேவதை.
தேன் சுமந்த ஒற்றை ரோஜா.
காலதேவன் படைதிட்ட அபூர்வ படைப்பு.
என் இதய ராணியே! உன்னை அள்ளி அனைக்க ஆசை.
என் எதிரில் நிற்கும் பளிங்கு சிலையே!
உன் அனுமதியுடன்
உன் ஆடைதனை என் வீர வாள் கொண்டு கழட்டவா.
இது இன்ப உலா போகும் நேரம்.
நாம் இருவரும் காம யாத்திரை போகும் காலம்.
காதல் உலகுக்கு விடை கொடுத்து காம உலகிற்கு செல்லும் நேரம்.
கரங்கள் பற்றியது.
காமம் தீயாக பற்றி எரிந்தது.
வாலிபம் வின்னை தொட முயற்சிக்க,
உயிர்கள் உறவாட தொடங்கின.
காமதேவன் கட்டளைக்கு காதல் பறவைகள் இனங்க,
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சாந்தம் அடைந்த
இரு மனம்,
மீண்டும் ஒரு சாந்தி முகூர்த்தம் நடத்த தயார் ஆனது.
- பாலு.