பெரியார்

உம் உரையும் நரையும்
உம் உடையும் உள்ளமும்
உம் எழுத்தும் எண்ணமும்
உம் சொல்லும் செயலும்
நெருப்பாய் சுட்டதோ பகைமையை!
மண்ணுக்குள் நீ வீழ்ந்து புல் முளைத்தும்
கண்ணுக்குள் கனவாய் வந்து
அலற வைத்தாய் பகையை..
நீ பிறந்ததால்இந்த தமிழ்மண்ணில்
இன்று
சமத்துவமும் சகோதரமும்
தழைக்குதய்யா..
வீணர்கள் சூழ்ச்சியெல்லாம் பொடிப்பொடியாக
உம் தத்துவங்கள் வாழுதய்யா
தமிழ் மண்ணிலே..
அலற வைத்தாய் புலம்ப வைத்தாய்
பித்தேறி
உடைகிழித்து அலைய வைத்தாய்
சாதி கழிசடைகள் சகுனங்கள்
இன்னும்
மேல்கீழ் வர்ணங்கள்
ஏவல் பெருச்சாளிகளின்
குலைநடுக்கம் என்றும் நீரே..

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (24-Dec-19, 12:32 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : periyaar
பார்வை : 2453

சிறந்த கவிதைகள்

மேலே