தள்ளிப்படும் என்றாள் தர்மபத்தினி
தும்மினேன், யாரை நினைத்துநீர் தும்மினீர்!
விம்மியே ஊடினாள் என்னுயிர்க் காதலி.
திருமணம் முடிந்தது, சிலவருடம் சென்றது;
ஒருநாள் அடக்க முடியாமல் தும்மினேன்! 1
ஏன்தும்மி தூக்கத்தைக் கெடுத்தீர் நீர்பாவி!
என்றாள் மனைவியான என்முன்னாள் காதலி.
ஜலதோஷம் என்றேன்; தள்ளிப்ப டுமென்றாள்
பலமாக மனைவி என்றதர்ம பத்தினி! 2
வழுத்தினாள் தும்மினே னாக, அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317 புலவி நுணுக்கம்
கருத்துரை: காளியப்பன் எசேக்கியல் • 16-Jul-2015 10:17 am
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? என்பதுவே திருக்குறளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரை.
இதையே ஆண்டு பலவானபின் காதலி மனையானபின் எப்படி என்ற கற்பனையை அழகாக வடித்திருக்கிறீர் கன்னியப்பரே! ஆயினும் இதில் கொஞ்சம் புலவி நுணுக்கம் சேர்த்திருக்கலாமோ?