புத்தகங்களே மக்களென்பேன்

தரைப்பலகை காலடியில் கிரீச்சிட் டலற
காற்றில் நிசப்தம் கனத்து நிலவ
தூசியும் பழைமையும் நுகர முடிகிறது
இத்தகைய கடைகள் மிகவும் அரிது. 1

உன்னிப்பாய்க் கவனித்தால் அங்குள்ள புத்தக
நன்கடை முழுவதும் உறங்கும் ஒவ்வொரு
புத்தகத்தின் தாழ்ந்த குறட்டை யொலியை
சத்தமின்றிக் கவனித்தால் நீயும் கேட்கலாம்! 2

மெதுவாக ஒருதடித்த புத்தகத்தைத் திறந்துபார்!
அதுநீட்டி நெளித்து கொட்டாவி விடுவதைக்கேள்!
அதனழ கியஅட்டை அரித்தே யிருக்கிறது
சிற்சில பக்கங்கள் கிழிந்துமிருக் கின்றன! 3

புத்தகங்கள் மக்களில்லை என்றும், அவைகள்
அத்தனையும் ஓரினமில் லையென்றும் யாரேனும்
சொல்ல முடியுமா?புத் தகங்களே மக்களென்பேன்!
முதுகெலும்பும், முகமும் அவைகளுக்கும் உள்ளதென்பேன்! 4

Ref: Books are people by Poet – Stephanie Dower

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-19, 10:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 202

மேலே